அர்ஜுன் விஜயகாந்த் பல படங்களில் செய்த பழைய காலத்து கேரக்டரில் கார்த்தியை வைத்து கோர்த்து விட்டிருக்கிறார் இயக்குநர் மித்ரன்
நம் பாரததேசத்தை அழிக்கும் வல்லமையுள்ள ஜப்பான் ஆயுதம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அதை மோப்பம் பிடிக்கும் வில்லன் எஸ்.ஜே சூர்யா அந்த ஆயுதத்தை ஆப்ரேட் செய்து இந்தியாவை அழிக்க நினைக்கிறார். அதற்கு அவர் சைடில் ஒரு நியாயமும் வைத்துள்ளார். ஹீரோ கார்த்தி எஸ்.ஜே சூர்யாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறார். இந்த ஹீரோ வில்லன் ஆட்டத்தில் இந்தியா எப்படி காப்பாற்றப்பட்டது என்பதே படத்தின் கதை
மகன் கார்த்தி நன்றாக ஸ்கோர் செய்கிறார். அப்பா கார்த்தியின் கெட்டப்பும் நடிப்பும் ஆங்காங்கே டல்லடிக்கிறது. எஸ்.ஜெ சூர்யா நல்ல நடிப்பைக் கொடுத்தாலும், அவரின் அந்த வழக்கமான மாடுலேசன் கடுப்பேத்துகிறது. மாளவிகா மோகனன் உள்பட பல கேரக்டர்கள் படத்தில் சின்னதாக அட்டனென்ஸ் போடுகிறார்கள்
ஜார்ஜ் வில்லியம்ஸ் தனது ஒளிப்பதிவு பணியைத் திறம்பட செய்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசை வழக்கம் போல் திரில்லர் மூட்-ஐ செட் செய்கிறது
மிகவும் அடித்துத் துவைத்து தொங்கவிட்ட கதை என்பதால் நமக்கு பெரிதாக கனெக்டிங் ஏற்படவில்லை. திரைக்கதையிலும் எந்த உணர்வெழுச்சியும் நிகழவில்லை. மேக்கிங் மட்டும் தரமாக இருக்கிறது. ஆனால் அதுமட்டும் போதாது அல்லவா? மேக்கிங்கில் மாஸ் காட்டிய சர்தார்2 ரைட்டிங்கில் பாஸ் கூட ஆகவில்லை
2.5/5