சத்திய சோதனை- விமர்சனம்

மண் மணம் வீச மற்றொரு கிராமப்படம் சத்தியசோதனை

மணல் காட்டுவழியாக வரும் ப்ரேம்ஜி கண்ணில் படுகிறது உயிரற்ற உடல் ஒன்று. வெயிலில் கிடக்கும் சடலத்தை நிழலில் இழுத்துப்போட்டு சடலத்தில் இருக்கும் செல்போன், ஒரு செயின், மற்றும் வாட்சை எடுத்து வைத்துக்கொண்டு சங்குப்பட்டி போலீஸ்டேசனுக்கு வருகிறார் ப்ரேம்ஜி. போலீஸ் சடலத்தின் மீதிருந்த மிச்ச நகைகளை வைத்து கணக்குப் போட்டு ப்ரேம்ஜியை விசாரிக்க..படத்தில் கலகலப்பு ஸ்டார்ட் ஆகி படம் கலகலவென நகர்கிறது. மிச்ச நகைகள் எங்கே போனது என்பதை விவரிக்கிறது மீதி திரைக்கதை

நடிகர்களின் தேர்வில் அருமையாக தடம் பதித்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. நடிகர்கள் அனைவரையும் இம்மியும் எதார்த்தம் பிசகாமல் நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தில் தான் ப்ரேம்ஜி கூட நன்றாக நடித்துள்ளார். ஏட்டய்யாவாக நடித்துள்ளவர், ஒரு பாட்டி, இன்பாமர் மொசக்குட்டி, உள்ளிட்ட திரையில் பங்கேற்ற அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். துளியும் செயற்கைத் தனம் இல்லாத நடிப்பை கொடுத்தமைக்கு அத்தனை நடிகர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்

இந்தப்படத்தின் கதையோட்டம் புரிந்து இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர். படத்தின் ஒளிப்பதிவிலும் சிறப்பான எதார்த்தம். எடிட்டரின் வொர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது

படம் துவங்கிய பத்து நிமிடத்திலே படத்தின் தன்மை இதுவென புரிந்துவிடுவதால் ஈசியாக படத்தோடு கனெக்ட் ஆக முடிகிறது. ஆழமில்லாத செண்டிமெண்ட் காட்சிகளும், அழுத்தமில்லாத முன்பாதியும் படத்தின் மைனஸ். இந்த இரண்டு விசயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சத்திய சோதனை இன்னும் சாதித்திருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்பவர்களை நிச்சயமாக ஈர்க்கும் இப்படம்
3/5

Actor PREMGIActress Swayamdirector suresh sangaiahSathyaSothanai movie