சமூகப்பாடம் எடுக்கும் வழக்கமான போலீஸ் கதை.
நேர்மையே வாழ்க்கை என வாழ்ந்து வரும் சப் இன்ஸ்பெக்டர் அருண் விஜய்க்கு ஸ்டேசன் இன்ஸ்பெக்டரே வில்லனாக இருக்கிறார். அந்த வில்லன் செய்யும் ஒரு காரியம் அருண்விஜய் மனைவி மீது ஓர் களங்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு அருண்விஜய் கொடுக்கும் ரியாக்சன் என்ன என்பதே சினத்தின் கதை
ஏற்கும் கேரக்டரை அப்படியே உள்வாங்கி நடித்து துவம்சம் செய்வதில் அருண்விஜய் சூப்பர் ஆள். சினத்திலும் தன்னை சிறப்பாக பொருத்தியிருக்கிறார் அருண்விஜய். அவரைத் தொடர்ந்து படத்தில் பங்கேற்றுள்ள யாவரும் பெரிதாக குறை வைக்கவில்லை.
படத்தின் இசை அமைப்பாளர் கதையின் தன்மை உணர்ந்து ஓரளவு வேலை செய்துள்ளார். ஒளிப்பதிவில் பெரிய குறைகள் எதுவும் இல்லை.
பொதுவாக சமூகத்திற்கு அறிவுரை சொல்லும் படங்களில் நம்பகத்தன்மை குறைவாகவும் லாஜிக் ஓட்டைகள் நிறைவாகவும் இருக்கும். சினத்திலும் அது ஆங்காங்கே தென்படுகிறது. சினம் எடுத்துக்கொண்ட களத்தை விட்டு மாறாமல் பயணிப்பது ஓகே என்றாலும் இன்னமும் சீரிய முயற்சி எடுத்திருந்தால் படம் இன்னமும் கவனம் பெற்றிருக்கும்
2.75/5
#Sinam #சினம்