நாயகிக்கு ஒரு கார் பரிசு விழுகிறது. அதன் பின்னால் ஒரு பிரச்சனை எழுகிறது. அதை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை
தான் ஏற்றுக்கொள்ளும் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அதீத உழைப்பைக் கொடுப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படத்திலும் அதை நிறைவாகச் செய்துள்ளார். அவரது அம்மா கேரக்டரில் வரும் தீபா ஷங்கர் சிறப்பாக நடித்துள்ளார். அக்காவாக நடித்துள்ள லஷ்மி பிரியா அசத்தியுள்ளார். மூன்று பெண்களின் நடிப்பாளுமை படத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளன. கருணாகரன், மைம்கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் அடிஷ்னலாக ஸ்கோர் செய்கிறார்கள்.
அஜ்மல் தஹஸீன் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஒருபாடல் மட்டும் ஓகே ரகமாக இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை இந்தப்படத்தின் காட்சிகளுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துள்ளது. பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபலன் இருவரின் ஒளிப்பதிவிலும் சிக்கனம் தெரிந்தாலும் இலக்கணம் மீறாமல் இருப்பது அழகு
தம்மாத்துண்டு கதை தான் என்றாலும் அதை முழுக்க முழுக்கச் சிரிப்பாக கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் SG.சார்லஸ். படத்தின் மையப்பாத்திரங்களின் செயல்பாடுகள் நியாயமாக இல்லாததால் அவர்களின் குறிக்கோள் மீது நமக்கு ஈர்ப்பு வரவேயில்லை. அதுவே படத்தோடு நம்மை ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது. கிலோ கணக்கில் உள்ள லாஜிக் கேள்விகளும் மண்டையப் பிளக்கிறது. கடும் முயற்சி செய்து பல இடங்களில் சிரிப்பை வர வைத்த வகையில் மட்டும் சொப்பன சுந்தரி சின்னதாக ஈர்க்கிறது
2.5/5
#SoppanaSundari #சொப்பனசுந்தரி