தேரே இஷ்க் மே- விமர்சனம்

தனுஷ் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் மீண்டுமொரு காதல் படம்

ஒரு தனி மனிதன் வாழ்வில் காதல் ஏற்படுத்தும் மகத்தான மற்றும் ஆபத்தான மாற்றங்களைச் சொல்கிறது இந்தப்படம். தனுஷ் அடிதடி என வன்முறை நிறைந்த இளைஞர். அவர் வாழ்வில் வசந்தம் போல வருகிறார் நாயகி க்ருதி சனோன். அவர் வன்முறை குணம் கொண்டவர்களை உளவியல் வழிநின்று அமைதியாக மாற்ற ஒரு தியரி கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். தனுஷை அவரது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகிறார். தனுஷ் அவரை காதலோடு அணுக, அவர் தனுஷை ஒரு புராஜெக்ட் ஆக அணுக முடிவு எதை நோக்கி என்பதாக படம் பயணிக்கிறது

தனுஷ் ஆங்காங்கே ரஜினி சாயலோடு நடித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் வேறலெவல் செய்துள்ளார். நாயகி க்ருதி சனோன் சில காட்சிகளில் நடிப்பில் தனுஷையே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். பின்பாதியில் தரமாக நடித்து மனதில் தனி இடம் பிடிக்கிறார். பிரகாஷ்ராஜ் கேரக்டரும் சிறப்பாக அமைந்துள்ளது

ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு யானை பலம். பாடல்களும் பின்னணி இசையும் அசத்துகிறது. ஒளிப்பதிவாளர் தஷர் காந்தி ரே அருமையான ஷாட்களால் கவனிக்க வைக்கிறார். CG ஷாட்ஸ் கூட எங்குமே துருத்தவில்லை

படம் துவக்கம் முதல் இறுதி வரை மெல்லிய சோகத்தோடே பயணிக்கிறது. தனுஷ் க்ருதி சனோன் காதலின் முடிவு முதலிலே தெரிந்து விடுவதால் தான் அந்த சோகம். நிறைய காட்சிகளில் புது அட்டம்ப்ட் ரசிக்க வைக்கிறது. காசியில் தனுஷுக்கு கிடைக்கும் ஆன்மிக ஆசீர்வாதம் சாலச்சிறப்பு. லாஜிக் மீறல்களும், ஸ்லோ மேக்கிங்கும், க்ளைமாக்ஸ்ஸும் பெரும் மைனஸ். அவற்றைச் சரி செய்திருந்தால் நல்ல காதல் அனுபவம் கிடைத்திருக்கும்
3/5

Actor DhanushActress Kriti Sanondirector Anand L RaiTere Ishk Mein movie