பரபர திரில்லர் அனுபவத்தைத் தரும் தணல் இந்த வாரம் தப்பிக்குமா?
வீட்டில் பெற்றோர்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் பண்ணாத ஹீரோ அதர்வா. காதலியின் வீட்டில் அவமதிக்கும் போது உடைந்து போய் வீட்டிற்கு வருகிறார். அதன்பின் தன் பெற்றோரின் தன்மை உணர்கிறார். கான்ஸ்டபிள் ஆகிறார். மேலும் அவருக்குத் தெரியாமலே வில்லன் அவரை ஸ்கெட்ச் போட்டு ஒரு ஏரியாவிற்குள் வர வைக்கிறார். ஆறு போலீஸ்களோடு அந்த ஏரியாவிற்குள் மாட்டிய அதர்வா வெளியில் வந்தாரா? வில்லனுக்கு போலீஸ்துறை மீதிருக்கும் வன்மத்திற்கான காரணம் என்ன? என்பதை உணர்த்துகிறது மீதிப்படம்
கதாநாயகனாக அதர்வா இந்தப்படத்திலும் நல்ல ஸ்கோர் செய்துள்ளார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் மட்டும் அவரது எமோஷ்னல் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. வில்லனாக இருந்தாலும் தேர்ந்த எமோஷ்னலை வெளிப்படுத்துகிறார் அஸ்வின். ஆகச்சிறப்பாக நடித்துள்ளார். நாயகி கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. அழகம் பெருமாள் உள்பட ஏனைய கேரக்டர்களும் ஒகே ரகம்
படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது கேமரா. இருளில் சுற்றிச்சுழலும் கேமரா படத்தின் அனலை அணைய விடாமல் பார்த்துக்கொள்கிறது. படத்தின் மற்றொரு ஹீரோ பேக்ரவுண்ட் மியூசிக். காட்சிகளில் உள்ள அழுத்தத்தை அப்படியே நமக்குள் கடத்துகிறது
முதல் இருபது நிமிடங்களுக்குப் பின் மின்னலென பாய்கிறது படம். அதே அதிர்வு பின்பாதியில் இல்லை என்பது சற்று அயர்ச்சி. ஆனாலும் க்ளைமாக்ஸ் ஒரு பரபர திரில்லர் உணர்வைத் தந்துவிடுகிறது. இந்த வீக் என்ட்-க்கு ஒரு ஒகே மூவி ரெடி
3/5