மற்றொரு பான் இண்டியா ஆப்பை சொறுவியுள்ளது தெலுங்குத் திரையுலகம் இரு வாரங்களுக்கு முன் டாக்சிக் கொடுத்த காயம் ஆறுமுன்னே அடுத்த காயம். சரி வாங்க கதையைப் பார்ப்போம்
இந்தியா சுதந்திரம் பெற்றபின் நடக்கும் கதை தான். கதை என்னன்னா ஆந்திராவில் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு எவ்வித அரசாங்க அடையாளங்களும் கிடையாது. அவர்களை கொத்தடிமைகளாக வைத்து கொடுமைப் படுத்துகிறது வில்லன் வகையறா. கொடுமை அனுபவிக்கும் மக்களில் ஹீரோ நானியின் தாயாரும் உண்டு. இந்தக் கொடுமையின் உச்சத்தில் தான் நானி பிறக்கிறார். அவர் வளரும் போது பால்யத்தில் அவரும் கொடுமைகளை அனுபவித்து சிறைக்குச் செல்கிறார். பல வருடம் சென்றபின் சிறைமீண்டு வரும் நானி தங்களை அடிமைப்படுத்திய வில்லன் கேங்கை எப்படிச் சூறையாடினார் என்பது கதை
உடலை வருத்தி மிகந்த சிரமங்களை ஏற்படுத்திக் கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் நானி. அவரின் டெடிகேசனுக்குப் பாராட்டுக்கள். கயாடு லோஹர் வழக்கம் போல அழகாக இருக்கிறார். நானியின் அம்மா கேரக்டரில் நடித்துள்ளவர் பின்னியெடுத்துள்ளார். மேலும் வில்லன் கோஷ்டி உள்பட எல்லோரும் ஒகே ரகம் தான்
ஒளிப்பதிவாளர் தரமான விஷுவலை சமரசமின்றி சிறப்பாகக் கொடுத்துள்ளார். நம்ம ஊர் அனிருத் போட்டுள்ள பின்னணி இசை ஒரு மணிநேர தூக்கத்தை தடுத்து நிறுத்தும் வல்லமையைத் கொண்டுள்ளது
படத்தில் நான்கு எமோஷ்னல் சீன்ஸ், நாற்பது ஹீரோயிச சீன்ஸ் வச்சாலே போதும் என இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா நினைத்து விட்டார் போல. படத்தில் திரைக்கதை தவிர்த்து எல்லாமே பெர்பெக்டாக இருக்கிறது. திரைக்கதை மட்டும் அப்படியில்லை என்பதால் எல்லாமே வேஸ்டாகி விட்டது
2.25/5