ராஜாசாப்- விமர்சனம்

பிரபாஸுக்கு இந்த ராஜாசாப் ஒரு சறுக்கலா? அல்லது சக்சஸா?

மன்னர் காலத்து கதையில் சின்னதாக இன்னர் வொர்க் செய்துள்ளனர். அதாகப்பட்டது தொலைந்து போன தனது கணவரை நினைத்து அல்சைமர் நோய் வருமளவு பாதிக்கப்பட்டுள்ளார் பிரபாஸின் பாட்டி. பாட்டியின் ஏக்கத்தை போக்க தாத்தாவைத் தேடி பயணிக்கிறார் பேரன் பிரபாஸ். தாத்தாவாக இருக்கும் சஞ்சத் தத் எங்கு போனார்..ஏன் போனார் எப்படி போனார் என்பதை எல்லாம் கோனார் சைஸ் நோட் அளவிற்கு குழப்பி அடித்து கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மாருதி

ஒரு மாஸ் ஹீரோவை மற்றவர்கள் தான் பில்டப் செய்ய வேண்டும். மாறாக இங்கு பிரபாஸே அவரை புகழ்ந்து கொள்கிறார். நடிப்பில் அலட்டல் அதிகம். மாளவிகா மோகனன் கவர்ச்சித் தாண்டவம் ஆடியுள்ளார். நிதி அகர்வாலும் அப்படியே. ரிதுகுமாரும் தன் தன் பங்கில் சளைக்கவில்லை. சஞ்சத் தத் காட்டும் வில்லத்தனம் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. சமுத்திரக்கனி கேரக்டரும் டம்மி தான்

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிறைய ஷாட்கள் சிறப்பாக அமைந்துள்ளது. வரைகலை உதவியோடு காட்சி வழியாக சில பிரம்மாண்டங்களை காட்டியுள்ளார். தமன் இசையில் பாடல்களில் பெரிய பெப் இல்லை. பின்னணி இசை டெப்த்தாக இருந்தாலும்,காட்சிகள் டெத்தாக இருப்பதால் அவர் உழைப்பு வெத்தாக போயுள்ளது

கதையிலே பழைய வாடை என்பதால் படம் துவங்கும் போதே போரிங் ஆகிவிடுகிறது. திரைக்கதை அதற்கு மேல். வாவ் பேக்டர் எனச் சொல்வதற்கு படத்தில் ஒன்றுமேயில்லை. கடைசி அரை மணிநேர படம் ஒகே. மற்றபடி ராஜாசாப்பு..பெரிய ஆப்பு
2/5

Actor PrabhasTheRajaSaab movie