திட்டம் இரண்டு- விமர்சனம்

பாலினம் கடந்த ஓர் இனம் உண்டு..அது அன்பினம். அந்த அன்பை உள்நோக்கி பார்த்தால் அங்கு பாலினபேதம் தெரியாது என்ற கருத்தை பேச முயற்சித்திருக்கிறது திட்டம் இரண்டு!
போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷ் சுபாஷ் செல்வம் மீது ஒரு பேருந்துப்பயணத்தில் காதல் கொள்கிறார். நடுநிசியில் ஒரு கவிதை போல படம் துவங்குவதால் எதோ பக்கா லவ் செப்ஜெக்ட் என்ற மைன்ட் செட்டிற்கு வந்தால் படத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..பினிஷிங்கில் புத்தம் புதிய ஒரு எமோஷ்னல் டச். இவையெல்லாம் தான் திட்டம் இரண்டு.

இரவுப்பேருந்து பயணத்தில் ஒரு பையனைப் பார்த்ததும் லவ் பண்ணுவது, குறும்படங்களில் நடித்து வரும் அந்த இளைஞனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக முக்கியத்துவம் கொடுத்து காதலிப்பது எல்லாம் அவரை பாலிஷ் பெண்ணாகத் தான் எண்ண வைக்கிறது..போலீஸ் பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அவரின் நடிப்பில் துளி குறையும் இல்லை. அந்தக் கதாப்பாத்திரத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இன்னும் வலுப்படுத்தி இருக்கலாம். அர்ஜுனாக வரும் சுபாஷ் செல்வம் நன்றாக நடித்துள்ளார். மேலும் சூர்யாவாக வரும் அனன்யா அசத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தான் படத்தின் ஹீரோயின் என்றாலும் கதை அனன்யாவை முன் வைத்தே நகர்வதால் அவரது கேரக்டரே முதன்மை பெறுகிறது.

டெக்னிக்கலாக இளைஞர்கள் ஓரளவு உழைத்திருந்தாலும் இது பக்கா லோ பட்ஜெட் படம் என்பதை பல காட்சிகள் சொல்லி விடுகின்றன.
தன்பாலின ஈர்ப்பு என்பது ஒருவரின் ஹார்ன்மோன் பிரச்சனை. அதனால் அவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்க வேண்டியதில்லை என்று கருத்தை வரவேற்கலாம். ஆனால் அவர்கள் ஆசைப்படும் மனிதியோ மனிதனோ அதற்கு உடன்படாவிட்டால் அது அவர்களின் உரிமை எனவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விசயத்தை இயக்குநர் இன்னும் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கலாம்…திட்டம் இரண்டு- நல்ல முயற்சி
3/5

Actress Aishwarya Rajeshdirector Vignesh KarthickThittam Irandu movie