துணிவு- விமர்சனம்

மாஸ் மெட்டிரியல் கலந்து ரசிர்களுக்கு கிளாஸ் எடுத்தால் அதுதான் துணிவு

படத்தின் துவக்கத்தில் ஒரு வங்கிக்கொள்ளையனாக வருகிறார் அஜித். முழுமையாக வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அஜித் வெளியில் போலீஸ்துறைக்கு சில அஜெண்டாக்களை வைக்கிறார். அஜித் யார்? அந்தக் கொள்ளைக்கான காரணம் என்ன? என்பதெல்லாம் தான் துணிவு படத்தின் கதை

வயதைத் தாண்டிய வேகத்தை அஜித்திடம் பார்க்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அவ்வளவு எனர்ஜி அவரிடம். மஞ்சுவாரியார் கேரக்டர் பெரிதாக எழுதப்பட வில்லை. அஜித் படம் என்றால் வில்லன்கள் நிறையபேர் இருப்பார்கள். துணிவும் அந்த விசயத்தில் விதிவிலக்கல்ல. எல்லா வில்லன்களும் நன்றாகவே நடித்துள்ளனர். சமுத்திரக்கனி கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் பில்டப் போகப்போக சுருங்கி விடுகிறது. கல்யாணராமன் அடிக்கும் பல பன்ச்களில் அதிரிபுதிரி காமெடி வொர்க்கவுட் ஆகியுள்ளது

ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் போதுமானதாக இல்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு துணிவிற்கு பெரும்பலம் எனலாம்

வேகமாக பயணித்து முடியும் படத்தில் ஆடியன்ஸ் கனெக்டிங் பேக்டர் மிக குறைவாகவே இருக்கிறது. வங்கிகள் செய்யும் பித்தலாட்டங்களை அஜித் பட்டியல் போடும் காட்சிகள் எல்லாம் பட்டாஸு ரகம். அப்படியே தடம் பிடித்துப் பயணித்து இருந்தால் படம் மேலும் வலு சேர்த்திருக்கும். ஹீரோ மாஸுக்காக பல துப்பாக்கி ஷாட்கள் வைத்துள்ள இயக்குநர் ஹெச்.வினோத் குறியை சரியாக வைக்கவில்லை.
சிலபல குறைகள் இருந்தாலும் துணிவு ஒரு துணிவான முயற்சி
3/5

Actor ajithkumarActress Manju Warrierdirector HVinothThunivu movie