‘ட்ரிப்’ – விமர்சனம்

இளைஞர்களும் இளைஞிகளும் அடர்ந்த காட்டுக்குள் மனிதர்களை தின்று கொழிக்கும் கூட்டத்திடம் சிக்கினால் என்னாகும்? என்பதே டிரிப்பின் கதை! திரில்லர் கதைக்குள் காமெடியை வைப்பது நல்ல யுக்தி. ஆனால் திரில்லரே காமெடியாகப் போனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாந்துவிடுவார்கள் அல்லவா? அந்த விசயத்தில் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்

நாயகி சுனைனா பேரழகுப் பெட்டகம் போலவும் கூடவே கவர்ச்சியாகவும் இருக்கிறார். படம் முழுக்க கையில்லாத பனியனில் வந்து அவர் காட்டுகிற தாராள நடிப்புக்கு ஏராள லைக்ஸ் கன்பார்ம். அவரோடு டிரிப் அடிக்கிற கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லெஷ்மிபிரியா, நான்சி ஜெனிபர் & கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்

இடைவேளை வரை யோகிபாபுவும் கருணாகரனும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிற மொட்டை ராஜேந்திரன் நடிப்பு டெம்ப்ளேட்! விவேகம் இல்லாமலும் முன்பாதியில் வேகம் இல்லாமலும் பயணிக்கும் திரைக்கதையில் பின்னணி இசை தன்னால் முடிந்த எல்லா உதவியையும் செய்திருக்கிறது. நல்லா வருவீங்க இசை அமைப்பாளரே! கானா பாலாவின் பாடல் பாசிட்டிவ் எனர்ஜி!

காட்டையும் அதன் பசுமையையும் அழகு மாறாமல் கண்ணுக்குள் அள்ளி வந்து விருந்து படைத்துள்ளது உதயஷங்கர் ஜியின் கேமரா!படத்தில் காதல் பெரிதாக இருந்தாலும் ஒருசில காட்சிகளிலே காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. நல்லவேளை டூயட் பக்கம் போய் பெரிதாக கடுப்பேற்றவில்லை.கதையில் ஒரு பங்காக தாவரங்களை எடுத்தாண்டிருப்பது ஒரு புது விசயமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. ஜஸ்ட் ஆறுதல் ஒன்லி!நிறைகளைத் தாண்டி குறைகள் துருத்தி நிற்பதால் ஜாலி டிரிப் ஆக இதை எடுக்க முடியவில்லை. தட்ஸ் ஆல்!

2.5/5

actor Yogi BabuActress sunainaadirector Dennis ManjunathTrip Movie