வீரமே வாகை சூடும்- விமர்சனம்

வெவ்வேறு சாமானியர்களுக்கு நடக்கும் மூன்று கதைகளை ஒன்றிணைத்தால் அதுதான் வீரமே வாகை சூடும்!

நடிப்பிற்கென்று மெனக்கெடாமல் அடிதடி காட்சிகளுக்கு மட்டுமே மெனக்கெடுகிறார் விஷால். ஸ்டண்ட் யூனியனில் கார்ட் வைத்திருக்கும் அனைவருமே விஷாலிடம் அடி வாங்கியிருப்பார்கள் போல. படத்தின் துவக்கத்தில் யோகிபாபுவை வைத்து காமெடி என்ற பெயரில் அலுப்பான காவடியை தூக்கி ராவடி செய்வதை ஏற்கவே முடியவில்லை. குறிப்பாக நாயகி டிம்பிள் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் தியேட்டரை டோட்டல் ஊரடங்கு மோடுக்கு கொண்டு வந்துவிடுகிறது…

படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு இணையாக யுவனின் பின்னணி இசை அசத்தியுள்ளது. ஒரு பாடல் மட்டுமே கேட்கும் ரகம். ஒளிப்பதிவில் இருக்கும் தரம் வசனங்களிலும் இருப்பது ஆறுதல். சில சர்க்காசம் கலந்த வசனங்கள் ரசிக்க வைக்கின்றன

மூன்று கதைகளை எதார்த்தமாக ஒரு புள்ளியில் இணைக்கும் அறிமுக இயக்குநர் து.பா சரவணனின் ஐடியா ஓகே தான். ஆனால் அதை காட்சியாக கடத்துவதில் தான் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார்..

வாகை சூடாத வீரம்
2.5/5

Actor VishalActress Dimple Hayathidirector Thu Pa Saravananveerame vaagai soodum movie