அரைத்த மாவையே அரைத்து, துவைத்த துணியைவே துவைத்து புதிதாக புரட்டி எடுத்தால் அதுதான் வெந்து தணிந்தது காடு
நெல்லையில் படித்து முடித்துவிட்டு சாதாரண வேலை செய்யும் சிம்புவிற்கு ஜாதகம் ஒரு ஆர்டர் போடுகிறது. அந்த ஆர்டரின் படி மும்பை பறக்கிறார். மும்பையில் ஏற்கெனவே இரு தாதா கேங் இருக்கிறது. அங்கு சிலபல மர்டர்களும் நடக்கிறது. போதும் போதும் அடுத்து கதை என்ன என்பதை யாவரும் அறிவர் தானே? But அதைச் சொன்ன விதத்தில் என்ன இண்ட்ரஸ்டிங் என்பதை பார்க்கலாம்.
முதல் இண்ட்ரஸ்ட் சிம்புவின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ். சும்மா வெளுத்துக் காட்டியிருக்கிறார். அப்பாவி இளைஞன், அடப்பாவி தாதா என அவர் காட்டியிருக்கும் வெரைட்டி மிரட்டுகிறது. சித்தி இதானிக்கு பெரிதாக ஸ்கோர் பண்ண வாய்ப்பு வழங்கப்படவில்லை. கெளதம் பட ஹீரோயின்கள் கெட்டியாக தெரிவார்கள். இதில் ஹீரோயினை ஜட்டி விற்கும் ஆளாக கொண்டு வந்து சுருக்கிவிட்டார் கெளதம். சோ சேடு! ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிற நட்சத்திரங்கள் யாவருக்கும் பெரிய அளவிலான ஸ்கோப் இல்லை..இல்லை இல்லை
ஏ.ஆர் ரகுமான் சென்ற வாரம் கோப்ராவில் சொதப்பினாலும் இந்த வாரம் இப்படத்தில் ஓரளவு மாஸ் காட்டியிருக்கிறார். ஒன்றுமில்லாத சிலபல காட்சிகளுக்கு உயிர்&உயர்வு கொடுப்பது அவரே. விஷுவல்லி கெளதம் படங்கள் எப்போதுமே நம்மை ஏமாற்றாது. இப்படத்திற்கும் அந்த கியாரண்டி உண்டு..பல சிங்கிள் ஷாட் சீன்கள் இருக்கிறது. அவையும் அழகாகவே இருக்கிறது. எடிட்டர் மட்டும் இரவு நன்றாக தூங்கி முழித்து எடிட் செய்திருப்பார் போல. இயக்குநர் எடுத்த புட்டேஜ் எல்லாவற்றையும் வைத்திருக்கிறார். படம் லென்த்தோ லென்த்
பார்த்துப் பழகிய கதையை புதிதாக கோர்த்த விதம் முன்பாதியில் நன்றாகவே தெரிகிறது. ஆனால் அது பின்பாதியில் மிஸ் ஆகிவிட்டது. இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்க மெனக்கெட்டதை திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் படம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கும். தற்போது லைட் ஸ்ட்ராங்காக இருக்கிறது
2.75/5
#VendhuThanindhathuKaadu #வெந்துதணிந்ததுகாடு