யானை- விமர்சனம்

ஒரே சாதியாக இருந்தாலும் அங்கும் வன்மமும் வஞ்சமும் இருக்கும். சமத்துவ அன்புதான் அனைத்துக்கும் தீர்வாகும் என்பதை அரைத்த மாவை வைத்தே சொல்லியிருக்கிறார் யானைப்பாகன் ஹ்ரி. சரி யானை பலம் படத்தில் பாதியாவது இருக்கிறதா?

தந்தை ராஜேஷின் இளையதாரமான ராதிகாவின் மகனான அருண்விஜய் பக்கா வயலன்ட் பார்ட்டி. மூத்ததாரத்தின் மகன்களான சமுத்திரக்கனி, போஸ்வெங்கட், சஞ்சய் மூவரும் சாதிவெறியுள்ளவர்கள். சமுத்திரக்கனி மகள் அம்மு அபிராமி ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் ஓடிப்போக, சமுத்திரக்கனி மகளை கொல்ல நினைக்கிறார். அருண் விஜய் அண்ணன் மகளை காக்க நினைக்கிறார். இதுமட்டுமில்லாமல் ஒரு வில்லனுக்கும் இவர்களுக்குமான மோதல் ஒன்றும் இருக்கிறது. முடிவு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும் தானே!

அருண்விஜய் ஓர் முரட்டுச் சிங்கமாக படம்நெடுக கர்ஜிக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். பிரியாபவானி சங்கர் ஒரு காட்சியில் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆனால் அவரை ஈசியாக முந்துகிறார் அம்மு அபிராமி. நல்ல தேர்வு..நல்ல நடிப்பு. ராதிகா ராஜேஷ் கூட்டணி படத்தில் முத்திரைப்பதிப்பதில் ஆச்சர்யமில்லை. இமான் அண்ணாச்சி, லிங்கம் கேரக்டர், என படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். யோகிபாபு சில காட்சிகளில் பட்டாஸ் வெடிக்கிறார். நல்ல காமெடி. புகழ் இந்தப்படத்தில் எதற்கு?

ஹரி படத்திற்கென்றே அமைந்துள்ள கேமரா கோணங்கள் சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஜிவியின் பேக்ரவுண்ட் ஸ்கோர், பாடல்கள் இரண்டுமே நன்றாக ஸ்கோர் செய்துள்ளது.

கதை வேகமாக நகர்ந்தாலும் ஆல்ரெடி பார்த்த படத்தையே பார்ப்பது போன்ற உணர்வு எழுகிறது. பன்ச்சஸ் என எழுதப்பட்ட அரதப்பழசான வசனங்கள் சில இடங்களில் கொடுமைப் படுத்துகின்றன.
சுயசாதிக்குள்ளே இருக்கும் நமைச்சல் புகைச்சலை வெட்டவெளிச்சம் போட்டு காட்டியதற்காக ஹரியைப் பாராட்டலாம். தாமிரபரணி போன்ற படத்தை எதிர்பார்த்தால் யானைப்பசிக்கு சோளப்பொறி தான். அதே நேரம் சாமி2 அளவிற்கு சோதிக்கவில்லை என்பதும் நிஜம்

2.75/5

Actor arunvijayActress Priya BhavaniShankarDirector Hariyaanai movie