யசோதா – விமர்சனம்

வாடகைத் தாய்கள் மூலம் உதயமாகும் சிசுக்களை வைத்து கிரிமினல் வேலைகள் செய்யும் மாபியாக்களை ஒற்றை ஆளாய் சமந்தா அடித்து நொறுக்குவதே யசோதா

டைட்டிலுக்கு நியாயம் சேர்ப்பது போல சிசுக்களை காக்கும் பொறுப்பை சமந்தா ஏற்பதாக கதையை வடிவமைத்துள்ளனர் இயக்குநர்கள் ஹரி&ஹரிஷ். தன் சூழ்நிலை காரணமாக வரலெட்சுமி நடத்தும் வாடகைத்தாய் காப்பகம் போன்ற ஒரு கூட்டத்திற்குள் செல்கிறார் சமந்தா. உள்ளே சென்றபின் தான் அதிலுள்ள கிரிமினல் விசயங்கள் அவருக்குத் தெரியவருகின்றன. மற்றொரு புறம் ஒரு வெளிநாட்டு நடிகையும், ஒரு உள்நாட்டு பிஸ்னெஸ் மேனும், ஒரு மாடல் அழகியும் மரணமடைகிறார்கள். அதைப்பற்றிய விசாரணையில் சம்பத் டீம் இறங்குகிறது. இந்த இரண்டு க்ரைமும் எப்படி ஒன்றிணைந்து முடிகிறது என்பதே யசோதா படத்தின் திரைக்கதை

படத்தை முழுவதும் அசத்தலான நடிப்பால் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார் சமந்தா..அவரின் நடிப்பு அல்டிமேட். சம்பத் தேர்ந்த நடிகராக இப்படத்தில் வெளிப்படுகிறார். நேர்மையான மிலிட்டிரி மேனை கண்முன் நிறுத்துகிறார். வரலெட்சுமி வில்லி முகம் காட்டியிருக்கிறார். சில இடங்களில் அவருக்குள் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிறது. உன்னி முகுந்தனுக்கும் அப்படியே

மணிஷர்மாவின் பின்னணி இசை பதட்டமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. பாடல்களும் பராவாயில்லை ரகம். M.சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை கூட்டுகிறது. படத்தில் அசோக்கின் ஆர்ட் டிப்பார்மெண்ட் வொர்க்கும் அட்டகாசம். சி.ஜி ஏரியா மட்டும் வீக்கோ வீக்

ஒரு நல்ல லைனை தேர்ந்தெடுத்த இயக்குநர்கள் அதை சிறந்த திரைக்கதையாக்கும் விசயத்தில் கோட்டை விட்டுள்ளனர். சமந்தா தங்கையை வைத்து வரும் ட்விஸ்ட் படத்தின் ஹைலட்டாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக கூடிவரவில்லை. இதுபோல பல சீக்வென்ஸ்கள் உப்புச்சப்பில்லாமல் போய்விடுவது யசோதாவின் மைனஸ். திரைக்கதையை மட்டும் இன்னும் பலமாக வளர்த்திருந்தால் யசோதா கமர்சியல் தாயாக நின்றிருப்பாள்
2.75/5

#Yashoda

Actor Unni MukundanActress SamanthaActress Varalaxmi SarathkumarYashoda movie