“அம்ரித் ராம்நாத்” இசையில் உருவான “மனசே” பாடல் வீடியோ விரைவில் வெளியீடு!

இளம்வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர். கடந்த ஆண்டுகளில் அவர் மேற்கத்திய கிளாசிக்கல் பியானோ மற்றும் வயலின் ஆகியவற்றில் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார்.மக்களிடையே புகழ்பெற்ற இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக பிறந்ததால் இசை என்பது இவருடன் இருந்து தவிர்க்க முடியாதது. மேலும், கர்நாடிக் கிளாசிக்கல் வயலின் பயிற்சியை வயலின் வித்வானான ஸ்ரீ லால்குடி ஜி. ஜெயராமனிடம் பெற்றிருக்கிறார்.
மனசே பாடல் மனதின் உண்மைகளை படம் பிடித்து காண்பிக்கும்படியான உரையாடலுடனான பாடலாக அமைந்திருக்கிறது. இது ‘self love’ என்ற வகையிலும் அமைந்திருக்கிறது. பாடலாகவும் இசையாகவும் இந்த ‘மனசே’ பாடல் பலரது நினைவுகளுக்கு பிடித்ததாகவும் முணுமுணுக்கும் வகையிலும் வந்துள்ளது. லைவ் நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இது எனக்கு முக்கியமான பாடலும் கூட.
இந்த மனசே பாடல் பலவிதமான மியூசிகல் ஸ்டைலுடன் பாப் ஏஸ்தெட்டிக் உடன் பல விதமான இந்திய இசை அடுக்குகளுடன் அமைந்துள்ளது. கிடாரின் இசை, க்ளிக்ஸ், கைத்தட்டல்கள், முணுமுணுக்கும் சத்தங்கள் மற்றும் பலவற்றுடன் இந்தப் பாடல் பிண்ணப்பட்டுள்ளது. மனசே பாடல் அனைத்துத் தளங்களிலும் இந்த வருடம் அக்டோபர் மாதம் 28 ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ வெளியானதுக்குப் பிறகு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. அதையும் கவனித்து ஆதரவு கொடுங்கள்.
அன்புடன் அம்ரித் ராம்நாத்