ஜி.வி பிரகாஷ் ஜோடியா? ஆள விடுங்க சாமீ… : தெறித்து ஓடும் ஆனந்தி!

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘பொறியாளன்’ படத்தில் நாயகியாக தமிழுக்கு அறிமுகமானவர் ஆனந்தி.
ஆந்திரா வரவான இவருக்கு ‘கயல்’, ‘சண்டிவீரன்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என அடுத்தடுத்த படங்கள் கிடைத்தாலும் அப்படி கிடைத்து நடித்த படங்கள் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபீஸில் ப்ளாப் படங்கள் தான்.
இதில் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.விக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் ஹிட்டானதால் ஜி.வியின் செண்டிமெண்ட் தனக்கு வெற்றிகளைக் கொடுக்கும் என்கிற நப்பாசையில் தொடர்ந்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ என அடுத்தடுத்து அவருக்கு நாயகியாக நடித்தார். இப்படி தொடர்ந்து ஜி.வியுடன் ஜோடி போட்டதால் மற்ற ஹீரோக்கள் ஆனந்தியை தங்கள் படங்களில் கமிட் செய்யத் தயங்கினார்.
இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தி ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறாராம்.
ஆமாம், கை வசம் மன்னார் வகையறா உட்பட மூன்றே மூன்று படங்களை மட்டும் வைத்திருக்கும் ஆனந்தி இனி ஜி.வி பிரகாஷ் ஜோடியாக வருகிற வாய்ப்பை சீண்டுவதில்லை என்கிற முடிவு தான் அது.
இனிமேலாவது நல்லது நடக்குதான்னு பார்ப்போம்.