கண்டு கொள்ளாத தமிழ்சினிமா : மீண்டும் சின்னத்திரைக்கு போன விஜய் டிவி ரம்யா!

Get real time updates directly on you device, subscribe now.

ramya1

வெறும் ரம்யா என்பதை விட விஜய் டிவி ரம்யா என்றால் தொகுப்பாளினி ரம்யாவை எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும்.

அந்தளவுக்கு விஜய் டிவியில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக வேலை செய்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

அவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்புக்காகவே பல திரையுலக விழாக்களையும் தொகுத்து வழங்க வாய்ப்பு வந்ததையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை அதிகம் தவிர்த்து வந்தார்.

ரம்யாவுக்கும் சென்னையைச் சேர்ந்த அப்ரஜித் என்பவருக்கும் கடந்த 2014 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

Related Posts
1 of 5

திருமணத்துக்குப் பிறகும் தனது தொகுப்பாளினி வேலையை தொடர்ந்து செய்து வந்த ரம்யா சினிமாவிலும் நடிக்க முயற்சித்தார். பணியை தொடர்ந்து செய்து வந்தார் ரம்யா. இதனிடையே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளையும் தேடி வந்தார். மணிரத்னம் இயக்கிய காதல் கண்மணி, சூர்யாவின் மாஸ் உட்பட சில படங்களிலும் தலை காட்டினார்.

இதற்கிடையே கணவருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்ற அவர் இப்போது சினிமாவிலும் வாய்ப்பு வராத நிலையில் மீண்டும் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியிடமே சரண்டர் ஆகியிருக்கிறார் ரம்யா.

ஆமாம், விஜய் டிவி சூப்பர் சிங் நிகழ்ச்சியின் புதிய சீஸனை தொகுத்து வழங்கப் போகிறார் ரம்யா.

இனி சினிமாப் படங்களில் ஹெஸ்ட் ரோலில் கூட நடிக்கப் போவதில்லை என்றும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.