பெரிய தப்பு பண்ணிட்டோமோ? : இப்போ தான் ஃபீல் பண்றாராம் அனிருத்
எந்த வகையிலும் அந்த பாழாய்ப்போன பீப் பாடலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிப் பார்த்து விட்டார் அனிருத்.
ஆனால் அவர் சொல்வதைத் தான் யாருமே நம்பத் தயாராக இல்லை.
இப்படி ஒரு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவும் அனிருத்தை முதலில் கழற்றி விட்டது அவருடைய நெருங்கிய உறவினரான தனுஷ் தான்.
இன்றைக்கு உலக அளவில் அனிருத் பிரபலமடைந்ததற்கும் ‘3’ படத்தில் அவர் கொடுத்த வாய்ப்பு தான் முக்கிய காரணம்.
அப்படி இருந்தும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டதால் எங்கே அவருடன் சேர்ந்து நம் பெயரும் கெட்டுப்போய் விடுமோ என்று பயந்த தனுஷ் தான் நடித்து வரும் ‘கொடி’ படத்தில் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் சந்தோஷ் நாராயணனையே இசையமைப்பாளராக ரெகமெண்ட் செய்து வருகிறாராம்.
கைவசம் ”ஆக்கோ”, ”ரெமோ”, ”ரம்” ஆகிய படங்களை மட்டுமே வைத்திருக்கும் அனிருத்தைத் தேடி புதுப்பட வாய்ப்புகள் வருவதும் குறைய ஆரம்பித்து விட்டது.
எங்கு போனாலும் அந்த பீப் சாங்க்கைப் பற்றியே கேள்வி கேட்பதால் பதில் சொல்லி சொல்லி சலித்து விட்ட அனிருத் இப்போது தான் அதைப்பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.
பெரிய தப்பு பண்ணிட்டோமோ..?