சிவகார்த்திகேயன் போட்ட திடீர் கெட்டப்! – ரெடியாகுது புதுப்படம்?
நேற்று சிவகார்த்திகேயனின் ட்விட்டரைப் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் ஸ்டைலிசான புது கெட்டப்பில் ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
அதைப் பார்த்ததும் குஷியான ரசிகர்கள் “இது எந்தப் படத்துக்கான கெட்டப்?” என்று ஆவலோடு கேள்விகளை எழுப்பினர்.
இது படத்துக்காக இல்லை. திடீரென்று நடத்திய போட்டோ ஷூட் என்றார்.
அந்த பதில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் ”இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி” என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டார் அவரது நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளருமான அனிருத்.
உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது. நான் ரெடி சார்… நாளை வந்து சந்திக்கிறேன்… வேலையை தொடங்குவோம்’ என்று பதில் கொடுத்திருக்கிறார்.
தற்போது ‘சீமராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. #Sivakarthikeyan