‘ஆண்டனி’ படத்தில் அறிமுகமாகும் 19 வயது இளம் பெண் இசையமைப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

றிமுக இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள படம் ‘ஆண்டனி’.

சண்டக்கோழி புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு 19 வயதே ஆன இளம் பெண்ணான ஷிவாத்மிக்கா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா இருவரும் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர்.

பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் குட்டி குமார் ”இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றி.

‘ஆண்டனி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் 19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா!

இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்தியாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல், மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும் படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.’ என்றார்.

இளம் பெண் இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசிய போது ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி. இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.