வெயிட் பார்ட்டியான ‘இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கா!
ஹீரோயின்களுக்கு எடையைக் குறைக்கச் சொன்னால் எத்தனை கிலோ வேண்டுமானாலும் குறைக்கத் தயாராக இருப்பார்கள். அதுவே ஒரு ரெண்டு கிலோ வெயிட் போடுங்க என்றால் அய்யயோ என்று இஞ்சியைத் தின்ற குரங்காட்டம் முகத்தை வைத்துக் கொள்வார்கள்.
இப்படி கேரக்டருக்காக சின்ன சமரசத்தைக் கூட ஏற்கத் தயங்கும் ஹீரோயின்களுக்கு மத்தியில் சுமார் 15 கிலோ வரை எடையை கூட்டியிருக்கிறார் நடிகை அனுஷ்கா.
எல்லாம் ஆர்யாவுடன் அவர் இணைந்து நடித்து வரும் இஞ்சி இடுப்பழகி படத்துக்காகத்தான்.
உடம்பை குறைக்க வேண்டுமென்றால் டாக்டர்களின் ஆலோசனைப்படி டயட்டெல்லாம் இருந்து குறைக்க வேண்டியிருக்கும். ஜிம்முக்குப் போக வேண்டியிருக்கும். இப்போது அனுஷ்காவுக்கு அந்த எல்லையே இல்லை. அதனால் கையில் கிடைக்கிற எந்த உணவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கிறார் அனுஷ்கா.
ஒல்லியான தேகத்தை விரும்பும் பெண்களைப் பற்றிய கதை என்பதால் கேரக்டருக்கு வெயிட் போடச் சொன்னாராம் படத்தின் இயக்குனர் கோவெல முடி.