ஆர்யா என் மகளை காதலிக்கவில்லை! – சாயிஷா அம்மா அதிரடி

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் ப்ளேபாய் என்றாலே எல்லோரும் ஆர்யாவை தான் கை காட்டுவார்கள். அவருடன் சேர்ந்து நடிக்கும் எந்த நடிகையாக இருந்தாலும் அவரோடு இணைத்து கிசுகிசு கிளம்பி விடும்.

அப்படித்தான் ‘கஜினிகாந்த்’ படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்த போதும் இருவருக்கும் காதல் என்று செய்தி வெளியானது. இதுவும் வழக்கம் போல கிசுகிசுவாகத்தான் இன்று எல்லோரும் நம்பினர். இருவருக்குமான வயசு வித்தியாசம் தான் அதற்கு முக்கிய காரணம்.

ஆனால் இது கிசுகிசு அல்ல, உண்மையான காதல் தான் என்று தனது திருமண அறிவிப்பின் மூலமாக உறுதிப்படுத்தினார் ஆர்யா.

நேற்று பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், வருகிற மார்ச் மாதம் 10-ம் தேதி எங்கள் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Related Posts
1 of 10

தமிழில் ‘வனமகன்’, ‘கஜினிகாந்த்’ ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களில் நடித்த சாயிஷா பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார்- சாயிரா பானுவின் பேத்தியாவார். ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்ட நிலையில் தனது திருமண அறிவிப்பின் மூலம் அந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஆர்யா.

இந்த அறிவிப்பைப் பார்த்த திரையுலகினர் பலரும் ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் சாயிஷாவின் அம்மா சாஹீன் பானு ”என் மகள் திருமணத்தை எல்லோரும் காதல் திருமணம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது காதல் திருமணம் இல்லை.

சாயிஷாவை பிடித்துப் போய் ஆர்யா குடும்பத்தினர் எங்களை அணுகினார்கள். அதன்பிறகு இரு வீட்டாரும் இணைந்து பேசி திருமணத்தை நிச்சயம் செய்தோம். ஆர்யா மாதிரி ஒரு மாப்பிள்ளை என் மகளுக்கு அமைவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்.