பிடி கொடுக்காத அனுஷ்கா : மனசு நொந்த இயக்குநர்!

34 வயதாகும் அனுஷ்கா இப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்.
ஆனால் முன்பு போல் ஹீரோக்களுடன் சேர்ந்து மரத்தை சுற்றி வந்து டூயட் பாடுவதை வெகுவாக குறைத்து விட்டு அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி, பாக்மதி என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சரித்திர பின்னணி கதைகளை தேர்வு செய்து நடித்து தனது ரூட்டை மாற்றியிருக்கிறார்.
அவ்வப்போது கமர்ஷியல் படங்களில் தலை காட்டி வந்தாலும் அதிக முக்கியத்துவம் சரித்திரப் பின்னணி கொண்ட கதைகளுக்கே கொடுத்து வந்தார்.
இதை அறிந்து கொண்ட இயக்குநரும், அனுஷ்காவின் நெருங்கிய நண்பருமான க்ரிஷ் சமீபத்தில் சரித்திர பின்னணி கொண்ட ஒரு கதையை தயார் செய்து விட்டு அனுஷ்காவிடம் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார்.
உடனே அனுஷ்கா ஓ.கே சொல்லியிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்?
அதுதான் இல்லை.
கையில ரெண்டு மூணு படங்கள் இருக்கு, அதனால் உங்களுக்கு கால்ஷீட் தர முடியாது வேற நாயகியைப் போய் பார்த்துங்க என்று க்ரிஷிடம் சொல்லி விட்டாராம்.
க்ரிஷுக்கு கால்ஷீட் இல்லை என்று சொன்ன அனுஷ்கா அதன்பிறகு கமிட் செய்த ஒரு பக்தி படத்துக்கு நாகர்ஜூனா ஜோடியாக நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
சரித்திரம், பக்தி போன்ற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த அனுஷ்கா ஏன் இப்படி திடீரென்று மனசு மாறினார்? என்று தெலுங்கு திரையுலகமே பெருங் குழப்பத்தில் இருக்கிறது.
இயக்குநர் க்ரிஷோ மனசு நொந்து போயிருக்கிறாராம்.