கொஞ்ச நாளா ஆளையே காணோம்..? – எங்கே போனார் அனுஷ்கா?

Get real time updates directly on you device, subscribe now.

துவரை ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்த பிறகு தான் அவருடைய மார்க்கெட்டே ஆட்டம் காண ஆரம்பித்தது.

அந்தப்படத்துக்காக உடல் எடையைக் கூட்டியவரால் அதன் குறித்த நேரத்துக்குள் குறைக்க முடியவில்லை. இதற்கும் அவர் யோகா டீச்சர் தான். ஆனாலும் பலன் பெரிதாக இல்லை. இதனால் அனுஷ்கா, சில வருடங்களாக எடையைக் குறைக்கவே முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டார்.

இறுதியாக ‘பாகுபலி 2’, ‘பாகமதி’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீசானது. இதில், ‘பாகுபலி 2’ வில் கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவின் எடையை ராஜமெளலி குறைத்துக் காண்பித்திருக்கிறார் என்று ரசிகர்களால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், ‘பாகமதி’யில் ஆள் பார்ப்பதற்கு குண்டாகவே தெரிந்தார்.

Related Posts
1 of 7

இதனாலேயே புதிதாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு எப்படியோ கணிசமான அளவுக்கு உடல் எடையைக் குறைத்து புதிய படங்களில் நடிப்பதற்காக மீண்டும் கதை கேட்கத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கு டைரக்டர் ஜெயேந்திரா இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக கோபிசந்த் நடிக்கிறார். விரைவிலேயே தமிழிலும் அனுஷ்காவின் எண்ட்ரியை எதிர்பார்க்கலாம்.