விஜய் டிவியில இருக்கேன், ஆனா இல்ல… : நழுவிய ‘காபி வித் டிடி’
கிட்டத்தட்ட விஜய் டிவியில் ‘செல்லக்குழந்தை’ போலவே இருந்தார் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி.
இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் டிவி விருது விழாவில் ‘டிடி’ செய்த சில சேட்டைகள் விஜய் டிவிக்கு பிடிக்காததால் அவரை விஜய் டிவி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி விட்டதாக செய்திகள் பரவியது.
இனிமேல் விஜய் டிவியில் டிடி காபி விற்பதை சின்னத்திரை ரசிகர்களால் பார்க்க முடியாது என்று ஆளாளுக்கு சொல்லிக்கொண்டிருக்க, அது உண்மை தான் என்பது போலவே கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் டிடியை காணவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்க யார் போன் பண்ணினாலும் அதை அவர் அட்டெண்ட் செய்வதில்லை. பட் இதுகுறித்து கேட்டே ஆக வேண்டும் என்று டிடியை துரத்திய ஒரு நிருபரிடம் ”நான் விஜய் டிவியை விட்டு விலகிட்டதா சொல்றதெல்லாம் செம காமெடி. அது வெறும் வதந்தி தான்.” என்பதோடு முடித்து விட்டாராம் டிடி.
எது உண்மை என்கிற கோணத்தில் சமூகமே டென்ஷனாகிக் கிடக்க, இன்னொரு பக்கம் அவர் கர்ப்பமாக இருக்கிறார். டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியிருப்பதால் தற்காலிகமாக அந்த நிகழ்ச்சியை டிடி நடத்தவில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
எது எப்படியோ ‘டிடி’ மீண்டும் விஜய் டிவிக்கு வந்து காபி விற்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆவா…!