அனுஷ்கா மேல செம கடுப்புல இருக்காராம் ராஜமெளலி : ஏன்? என்னாச்சு..?

பாகுபலி முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும் போது, அதே படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றினால் தானே இன்னொரு பிரம்மாண்ட வெற்றியைப் பெற முடியும்.
ஆனால் அனுஷ்கா அதற்கு சரிப்பட்டு வராததால் வேறு வழியில்லாமல் ”பாகுபலி” இரண்டாம் பாகத்திலும் தமன்னாவுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இதனால் எங்கே அனுஷ்கா கேரக்டருக்கு முதல் பாகத்தில் கொடுத்த பில்டப்புக்கு அர்த்தமில்லை என்கிற எண்ணம் படம் பார்க்கிற ரசிகர்கள் மத்தியில் வந்து விடுமோ? என்கிற கவலையும் வேறு. இன்னொரு பக்கம் அனுஷ்கா மீது தீரா கோபம் வேறு!
மேட்டர் இதுதான்.
”பாகுபலி” முதல் பாகத்தில் அனுஷ்கா சிறைக்கைதியாக இருப்பார். அவருடைய கேரக்டர் எந்த மாதிரியானது என்பதை இரண்டாம் பாகத்தில் தான் முழுமையாக காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்தார் ராஜமெளலி.
இரண்டாம் பாகம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதம் ஆனதால் அந்த கேப்பில் ”இஞ்சி இடுப்பழகி” படத்தில் நடிக்கப் போனார் அனுஷ்கா. ஒரு குண்டுப்பெண்ணைப் பற்றிய கதை என்பதால் அப்படத்துக்காக உடல் எடையை நிஜமாகவே ஏற்றி நடித்தார் . படம் வெளியாகி பெரிதாக போகவில்லை என்றாலும் ”பாகுபலி” இரண்டாம் பாகத்துக்காக குறிப்பிட்ட அளவுக்கு எடையை குறைத்து விட்டு வரச்சொல்லியிருந்தார் இயக்குநர் ராஜமெளலி.
அவர் கொடுத்த காலகட்டத்துக்குள் எதிர்பார்த்த அளவுக்கு எடையைக் குறைக்கமுடியவில்லை. மேலும் அவர் எடையைக் குறைப்பதற்காக சில வாரங்கள் அவகாசம் கொடுத்தும் பிரயோசனமில்லை. இதனால் கோபமான ராஜமெளலி முதல் பாகத்தைப் போலவே இதிலும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்து விட்டு தமன்னாவுக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியிருக்கிறாராம்.
ராஜமெளலியின் இந்த முடிவு தமன்னாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் படத்தில் அது ஒரு பெரிய குறையாகத் தெரிந்து விடக்கூடாதே என்கிற கவலையில் இருக்கிறார் ராஜமெளலி.