”அபூர்வ மகான்” படத்தில் ஆறடி உயர பாபா சிலை

Get real time updates directly on you device, subscribe now.

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டி.என்.எஸ்.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் ”அபூர்வ மகான்.”

இந்த படத்தில் ‘தலைவாசல்’ விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய் முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு விணுசக்கரவர்த்தி நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கே.ஆர்.மணிமுத்து.

படம் பற்றி இயக்குனர் கே.ஆர்.மணிமுத்துவிடம் கேட்டோம்…

இந்த படத்திற்காக ஆறடி உயரமுள்ள பாபா சிலை வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நிறைய தடங்கல்கள் ஏற்பட்டது. அந்த தடங்கல்கள் அனைத்தும் பாபா அருளால் நீங்கியது.

படப்பிடிப்பிற்கு உருவாக்கப்பட்ட அந்த ஆறடி உயர பாபா சிலையை ஆவுடையார் கோயில் என்ற ஊரில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பாபா அருள் விரைவில் கிடைக்க உள்ளது என்றார் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து.