மொத ராத்திரியை திரையரங்கில் பாருங்கள்!
சென்னையில் நேற்று மொத ராத்திரி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. விழாவில் படத்தின் ஹீரோ ரிஷிகாந்த் பேசியதாவது,
“பல படங்களில் என்னுடைய கதாபாத்திரங்களை கவனித்து பாராட்டிய ஊடகங்களுக்கு என்னுடைய முதல் நன்றி. அதேபோல நான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கும் உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. ‘மொத ராத்திரி’ படத்தின் கதை ஷார்ட் ஃபிலிமாக ராஜா கொண்டு வந்தார். அதன் பிறகு ஆறு வருடம் பயணம் செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். என்னை விட்டுக் கொடுக்காத இயக்குநருக்கும், கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. நல்லதொரு படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் குடும்பமாக இந்த படத்தை ரசிப்பீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்குகளில் படம் பாருங்கள்”.என்றார்
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்