அப்பாகுட்டியின் கதைப் பற்றி சிலாகிக்கும் விஜய் ஆண்டனி

Get real time updates directly on you device, subscribe now.

 

தமிழ்சினிமாவில் யூனிக் கன்டென்டுக்கு மெனக்கெடும் நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. மாறன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அப்பாகுட்டி யூனிக் கன்டென்ட் என்கிறார்கள். அதைப் பின்னால் பார்க்கலாம். தற்போது படம் குறித்து விஜய் ஆண்டனி என்ன சொல்லியுள்ளார் என படிக்கலாம்

 

Related Posts
1 of 8

‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது” என்றார். வழக்கமான பிரஸ்மீட்டிலிருந்து சில மாற்றங்களை செய்திருந்தார் விஜய் ஆண்டனி