மீண்டும் வெளியாகும் CM விஜய் படம்

Get real time updates directly on you device, subscribe now.

வெளியான காலத்தில் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் நல்லா கல்லா கட்டிய படம் பைரவா!

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts
1 of 14

பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.