புதிய தோற்றத்தில் அசோக்செல்வன்!

Get real time updates directly on you device, subscribe now.

தொடர்ந்து கவனிக்க வைக்கும் படங்களில் நடித்து வரும் அசோக்செல்வனின் முக்கியமான பட அப்டேட் இது

‘கிங் 100 – King 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இது அவரது மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்தில் திறமையான நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

‘கிங் 100 – King 100’ படக்குழுவினர், இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அவர் ஒரு விதமான தீவிரமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி தருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.