அப்பா குட்டி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

பாக்கியராஜ் ஸ்டைலில் ஒரு படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் மு.மாறன்

விஜய் ஆண்டனி தனது மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். பாசமான மகளுக்கு உடலில் பெரும் பிரச்சனை வருகிறது. அதைச் சரி செய்யவேண்டுமானால் பெற்றோர் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். விஜய் ஆண்டனி அதை மட்டும் செய்ய முடியாது என்கிறார். காரணம் என்னவென்றால் அந்தக் குழந்தை விஜய் ஆண்டனி குழந்தையே கிடையாது! வாட்? யெஸ் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறது படம்

Related Posts
1 of 2

விஜய் ஆண்டனி வழக்கம் போல் அளவோடு நடித்துள்ளார். இன்னும் பெட்டர் பெர்பாமன்ஸை கொடுத்திருக்கலாம். ப்ரீத்தி அஸ்ராணி தனது பங்களிப்பைத் தரமாக வழங்கியுள்ளார். பகவதி பெருமாள், ஜென்சன் உள்ளிட்ட இன்னபிற நடிகர்கள் எல்லாரும் ஒகே ரகம்

ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார்

இடியாப்பச் சிக்கல் நிறைந்த கதை என்றாலும் பல இடங்களில் அதை திறமையாக கையாண்டுள்ளார் மு.மாறன். ஆனால் முன்பாதி படத்தை ஏகத்திற்கும் சறுக்க விட்டுட்டார்.
பின்பாதி சில இடங்கள் ப்ளாஸ்டாக அமைந்தாலும் ஓவரால் முழு திருப்தியை படம் வழங்கவில்லை
2.75/5