கேரளாவுக்கும் கெளரவம் சேர்க்கப் போகும் ‘அப்பா’

Get real time updates directly on you device, subscribe now.

appa2

‘அப்பா’ என்றொரு படம் வெளியாகியிருக்கிறது. அப்பா-பிள்ளைகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இந்தப்படம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட இந்தப் படத்தை ஒவ்வொரு அப்பாவும் தங்கள் குழந்தைகளுடன் சென்று தியேட்டரில் கட்டாயம் பாருங்கள் என்று தமிழகத்தில் உள்ள கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளி சார்பாக நோட்டீஸ் அடித்து அதை பெற்றோர்களுக்கு கொடுத்து அனுப்புகிறது.

இப்படிப்பட்ட நல்ல நிகழ்வுகள் தமிழ்சினிமாவில் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

அந்த ஆச்சரியத்தை சமீபத்தில் நிகழ்த்திய இயக்குநர் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ திரைப்படம் ஒரு தரமான படமாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

குழந்தை வளர்ப்பு, பெற்றோர்களின் பொறுப்புணர்வு, கல்விக்கொள்கை, கல்விக்கொள்ளை, ஆண் பெண் நட்பு என நவீன சமூகத்தின் பல தளங்களிலும் விரிவான பார்வையை செலுத்திய அப்பா படம் சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுமார் 250 தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகி மூன்று வாரங்களாகி விட்டநிலையில் இன்னமும் பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழகத்தில் அப்பா படத்துக்கு கிடைத்த வணிக வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது அப்பா படம் கேரளாவிலும் சுமார் 25 தியேட்டர்களில் ரிலீசாகி பெருமை சேர்க்கப் போகிறது.

Related Posts
1 of 5

இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே கேரளாவில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படமும் இடம்பிடித்துள்ளது. சமுத்திரக்கனி கேரள ரசிகர்களுக்க மிகவும் பரிச்சயமான நடிகர்.

சிக்கார், மாஸ்டர்ஸ், திருவம்படி தம்பன், த ஹிட் லிஸ்ட், டி கம்பெனி, தி ரிப்போர்ட்டர் உட்பட பல மலையாளப்படங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
கேரள ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கண்ணியமான இமேஜ் உண்டு.

எனவே அப்பா படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ணினால் நிச்சயமாக தப்பு பண்ணாது என்ற எண்ணத்தில் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஒரு விநியோகஸ்தர்.

அப்பாவை கொண்டாட கேரளாவும் தயாராகி விட்டது.