அரியவன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பெண்களை மீட்கும் நாயகன் என வழக்கமான ஹீரோ சப்ஜெக்ட் தான் அரியவன்

ஹீரோ இஷானுக்கு ஒரு காதலி இருக்கிறார். அந்தக்காதலியின் தோழிக்கு ஒரு ஆபத்து நேர்கிறது. அதைச் சரிசெய்ய இஷான் ஒரு என்ட்ரி கொடுக்கிறார். அந்த என்ட்ரி கதையில் பல என்ட்ரிகளை கொடுக்க அப்படியே திரைக்கதை விரிகிறது.

நடிகராக இஷானுக்கு இன்னும் நிறையவே முயற்சியும் பயிற்சியும் தேவை என்றாலும் ஓரளவு ஈர்க்கவே செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் நன்றாகவே தேறுகிறார். நாயகியின் கேரக்டர் ஓரளவு அழுத்தமாக அமைந்திருப்பதால் அவரது நடிப்பையும் ரசிக்க முடிகிறது. வில்லனாக வரும் டேனியல் பாலாஜி துளியும் குறை வைக்காமல் நடித்து தன் கேரக்டரை கரை சேர்த்துள்ளார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி மற்ற கேரக்டர்கள் இல்லை என்றாலும் யாரும் நடிப்பில் பெரிதாக குறை வைக்கவில்லை

கதைக்கு தேவையான இசையை தேவையான இடங்களில் யூஸ் பண்ணி ஸ்கோர் செய்திருக்கிறார் மியூசிக் டைரக்டர். விஷுவலாக கதை சொல்வதற்கு ஏற்ற லைட்டிங்கை செட் செய்து ஒளிப்பதிவில் கணம் சேர்த்துள்ளார் கேமராமேன்

உணர்வுகளை மென்மையாக கடத்துவதில் கை தேர்ந்தவரான மித்ரன் ஜவஹர் இப்படத்தில் சில வித்தியாச முயற்சிகளைச் செய்துள்ளார். இதுதான் முடிவு என்பதை முதலிலே உணர முடிவதும், முன்பாதியில் உள்ள பலவீனமான திரைக்கதையும் அரியவனில் உள்ள மைனஸ். ஒட்டுமொத்த படமாக பெரிதாக தவறு செய்யவில்லை என்பது அரியவனின் ப்ளஸ்

எடுத்தக் கதையில் முழுமை பெறவில்லை என்றாலும் முயற்சி செய்துள்ளான் அரியவன்

2.75/5