14 நாட்களில் படத்தை முடித்துள்ள இயக்குநர் சரத்குமார் பேச்சு!

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது.
இதில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது,
‘கொன்றால் பாவம்’ படத்தலைப்பே வித்தியாசமானது. மனதை ஈர்க்கக்கூடிய படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கு நான் வரவேண்டும் என வரலட்சுமி கூப்பிட்டார். 14 நாட்களில் இந்த படத்தை இயக்குநர் அற்புதமாக முடித்துள்ளார். எடிட்டர் ப்ரீத்தி இந்த படம் அற்புதமாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். ஒரு எடிட்டர் சொல்லிவிட்டால் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. வரலட்சுமி படித்து முடித்துவிட்டு நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு படம் நடிக்கிறேன் என்று கேட்டார். அதற்குப் பிறகு அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பது எல்லாமே அவருடைய சொந்த முயற்சியில் தான். நிறைய மொழிகள் கற்று வைத்துள்ளார். விரைவிலே ஆங்கிலம் பிரெஞ்சு படங்களில் நடித்தால் கூட ஆச்சரியம் இல்லை. இந்த படத்தில் சார்லியின் நடிப்பை பார்க்கும் பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்”.