‘காற்று வெளியிடை’ படத்தில் நிறைவேறிய கலை இயக்குநர் அமரனின் கனவு!

Get real time updates directly on you device, subscribe now.

amaran

பிரபல இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவது என்பது திரைத்துறையில் வளரும் கலைஞர்கள் அத்தனை பேரின் கனவாக இருக்கும்.

அதிலும் மணிரத்னம் போன்ற லெஜண்ட் இயக்குநரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் அதை விட ஒரு சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்?

அப்படி ஒரு சந்தோஷத்தோடு கனவு பலித்த திருப்தியில் இருக்கிறார் கலை இயக்குநர் அமரன்.

Related Posts
1 of 3

பிரபல இயக்குனரும் வீணை வித்வானுமாகிய காலம் சென்ற திரு. வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குநர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது.

அந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய திரு. மணிரத்னத்திற்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த அழகான வேலைப்பாடுகள் பிடித்துப் போக, உடனே கலை இயக்குநர் அமரனைக் கூப்பிட்டு தான் இயக்கி கொண்டிருக்கும் ” காற்று வெளியிடை..” படத்திற்கு கலை இயக்குநராக்கி விட்டார்.

ஆமாம், ஊட்டியில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்து விட்டு வந்திருக்கிறார் கலை இயக்குநர் அமரன்.

மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றும் கனவு கலை இயக்குநர் அமரனுக்கு நிஜமாகியிருக்கிறது.