சாதனை படைக்கும்’ஹனு-மேன்’ பட டீசர்!
படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.
படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனு-மேனின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்யேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனிடையே ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா ‘ஹனுமான் முன் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
#HanuMan