பிடி விட்றாத… : ஆளாளுக்கு அரவிந்த் சாமியை துரத்துறாங்க…

அதுவரை அரவிந்த் சாமியை எந்த இயக்குநரும் கண்டுகொள்ளவில்லை. இப்ப இல்லையா? பரவாயில்ல சார், 2017ல்ல கால்ஷுட் கொடுத்தாக் கூடப் போதும் என்று ஆளாளுக்கு துரத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படம் மெகா ஹிட் படமானாலும் ஆனது ஹீரோ ஜெயம் ரவி மட்டுமல்ல, அதில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமியும் பிரபலமாகி விட்டார்.
ஜெயம் ரவியின் கால்ஷூட்டை கேட்டுப் படையெடுக்கும் இயக்குநர்கள் வட்டம் அப்படியே அரவிந்த் சாமியையும் துரத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் அரவிந்த் சாமியோ தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கக் கூப்பிட்ட போதே இல்ல எனக்கு பிசினஸ் இருக்கு. அது முக்கியம், அதை விட்டுட்டு வர முடியாது என்று முதலில் மறுத்திருக்கிறார். பிறகு அந்தக் கேரக்டருக்கு மாதவனை கூப்பிட்டிருக்கிறார்கள்.
முதலில் ஓ.கே சொன்னவர் பிறகு என்ன நினைத்தாரோ பின்வாங்கி விட்டார். மீண்டும் அரவிந்த் சாமியையே ரீமேக் குழு நச்சரிக்க சரி இந்த ஒரு படத்தோட என்ன விட்டுடணும் என்கிற கண்டிஷனோடு சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.
தனி ஒருவன் ரீமேக்குக்கே அரவிந்த் சாமியின் பதில் இப்படி இருந்தால் அடுத்தடுத்து தேடி வரும் புதுப்படங்களுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
பிடி விட்றாத… என்று துரத்துகிறார்கள் அரவிந்த் சாமியை ஆனால் அவர் தான் ரெட் சிக்னலைக் காட்டி வருகிறவர்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
ரேஸ் குதிரையா இருந்தாலும் போட்டி வெச்சாத்தானே ஜெயிக்க முடியும்?