விஷாலுக்கு நடிகர் சங்கம் பிரபாஸுக்கு பாகுபலி – 2 : இதெப்படியிருக்கு..?

எப்போது விஷாலை சந்தித்தாலும் சந்திக்கும் போதெல்லாம் நிருபர்களும் தவறாமல் அவருடைய மேரேஜ் சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
விஷாலும் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடியட்டும், அதுக்கப்புறம் தான் ஏன்னோட மேரேஜ் என்கிற ரெடிமேட் பதிலைச் சொல்லுவார்.
எப்படி விஷால் ஒரு இப்படி ஒரு கொள்கையோடு இருக்கிறாரோ? அதே போல தெலுங்கிலும் பிரபல மாஸ் ஹீரோவான பிரபாஸ் தனது மேரேஜ் மேட்டரில் ஒரு கொள்கையோடு இருந்து வருகிறார்.
தொடர்ந்து ஐந்து படங்களில் சேர்ந்து நடித்ததாலோ என்னவோ பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என்று கொளுத்திப் போட்டன தெலுங்கு ஊடகங்கள்.
அடாது மழையிலும் இந்தச் செய்தி காட்டுத்தீயாக தென்னிந்திய ஊடகங்கள் அனைத்திலும் பரவி போன் மேல் போன் போடும் ஊடகங்களுக்கு அனுஷ்காவுக்கு பிரபாஸுடன் காதலும் இல்லை திருமணமும் இல்லை என்று மறுத்து விட்டார் அனுஷ்காவின் மேனேஜர்.
அதேபோல பிரபாஸின் தரப்பிலும் அனுஷ்காவுடன் திருமணம் என்பதெல்லாம் சான்ஸே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்ன பிரபாஸின் மாமனார் கூடவே அவருக்கு பெண் பார்த்து விட்ட ரகசியத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது.
‘பாகுபலி 2’ படம் முடிஞ்சு ரிலீஸ் ஆகிற வரைக்கும் பிரபாஸ் மேரேஜ் பண்ணிக்கிறதில்லேன்னு முடிவெடுத்திருக்கார். அவரோட கேரியர்ல அந்தப்படம் ரொம்ப முக்கியமான படம்கிறதுனால அதுல மட்டும் தான் கவனம் செலுத்தி வர்றார். ஏற்கனவே எங்க சொந்தத்துல அவருக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சுட்டோம். அவர் இப்போ படிச்சுக்கிட்டு இருக்கார். அவர் படிப்பு முடியவும், பாகுபலி 2 ரிலீசாகவும் டைம் சரியா இருக்கும். அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும். ஆனா பொண்ணு அனுஷ்கா இல்லேங்கிறது மட்டும் உண்மை என்று கூறியிருக்கிறார்.
நல்லவேளை அனுஷ்காவுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லாம விட்டாரே..?