புரூஸ்லீ – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Bruce-Lee-Review

RATING 2/5

மிழ்சினிமா ரசிகர்கள் அதிகம் பழகாத Dark Comedy (டார்க் காமெடி) என்கிற அடையாளத்தோடு ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘புரூஸ் லீ.’

சிறு வயதிலிருந்தே பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி பிரகாஷ் காதலி கீர்த்தி கார்பந்தா, நண்பன் பால சரவணன், அவனுடைய காதலி மூவருடன் மெரினா பீச்சை சுற்றி வரும் போது விளையாட்டுப் போட்டி ஒன்றில் கேமரா பரிசாகக் கிடைக்கிறது.

அந்த கேமராவை வைத்துக் கொண்டு விளையாட்டாக புகைப்படங்கள் எடுக்கும் போது, மிகப்பெரிய தாதாவான முனீஸ்காந்த் பிரபல அரசியல்வாதி மன்சூர் அலிகானை கொலை செய்வதையும் படமெடுத்து விடுகிறார்கள்.

சிக்கிய ஆதாரங்களை கமிஷனுக்கு அனுப்புகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரோ அந்த ஆதாரங்களை தாதா முனீஸ்காந்த்திடமே தந்து விட்டுப் போகிறார்.

இப்படி கமிஷனர் வரை எல்லா பெரியை கைகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் முனீஸ்காந்த் தன்னை போட்டோ எடுத்த கோபத்தில் ஜி.வி பிராகாஷின் காதலியையும் அவனது நண்பனின் காதலியையும் கடத்தி வைத்து கேமராவைக் கேட்டு மிரட்டுகிறார்.

காதலியை பறிகொடுத்த ஜி.வியும், பால சரவணனும் இன்னொரு ரெளடியான மொட்டை ராஜேந்திரனை நாடுகிறார்கள்.

கேமராவும், காதலிகளும் மீட்கப்பட்டார்களா? யாருக்கு வெற்றி கிடைத்தது? என்பதே கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 6

படத்துக்குப் படம் லட்டு லட்டான ஹீரோயின்களை அமைத்துக் கொள்ளும் ஜி.வி, இனி வரும் படங்களில் நல்ல கதைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்த்தியிருக்கிறது இந்தப்படம்.

 அந்தளவுக்கு கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் கமிட் செய்கிற படங்களையெல்லாம் கதை கேட்டுத்தான் கமிட் செய்கிறாரா? என்கிற பலத்தை சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது இந்தப் படத்தின் கதை.

டார்க் காமெடி என்கிறார்கள். ஆனால் படத்தில் காமெடி என்று வருகிற பெரும்பாலான காட்சிகள் படம் பார்க்கிற நமக்கு கடும் எரிச்சலைத்தான் தருகிறது. இதுவரை நடித்த படங்களில் ஜி.வி எப்படி வந்தாரோ அதே மாதிரி தான் எந்த ஆக்டிங் சேஞ்ச்சும் இல்லாமல் இதிலும் வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருப்பது நிஜம்.

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் கீர்த்தி கார்பந்தா பந்தா இல்லாத அசரடிக்கும் அழகு. வட நாட்டு ஓவியம் போல ஜி.வியுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் கவர்ச்சிக்கு உத்தரவாதம். வசன உச்சரிப்பில் லிப் மூவ்மெண்ட் மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது.

வழக்கமான காமெடி கேரக்டராக இல்லாமல் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் வருகிற முனீஸ்காந்த் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்.

பால சரவணனும், மொட்டை ராஜேந்திரனும் வருகிற சில காட்சிகளில் சிரிக்க முடிவது பெரும் ஆறுதல். சில காட்சிகளே வந்தாலும் ஆனந்தராஜ் மற்றும் மன்சூர் அலிகானின் காமெடி கலந்த நடிப்பு எக்ஸ்ட்ரா டைம் பாஸ்.

டைட்டில் கார்டை வித்தியாசமாக வடிவமைத்திருப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை பாராட்டியே ஆக வேண்டும். அதில் கவனம் செலுத்திய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கொஞ்சமேனும் திரைக்கதையில் தன் கவனத்தை செலுத்தியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அதோடு எதைப் பாராட்டுகிறோமோ? இல்லையோ? ‘இந்தப் படத்தின் சில காட்சிகள் பல படங்களில் இருந்து சுடப்பட்டவை தான்’ என்று டைட்டில் கார்டிலேயே
ஒப்புக் கொள்கிறாரே? இயக்குநரின் அந்த நேர்மையை பாராட்டியே ஆக வேண்டும்!

மற்றபடி நமக்கு என்ன வருமோ? அதைச் செய்ய வேண்டும், அல்லது அல்லது ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ? அதை படமாகத் தர வேண்டும் இந்த இரண்டையுமே கவனத்தில் கொள்ளாமல் ரெண்டுங்கெட்டானாக ஒரு ‘வித் அவுட் காமெடி டார்க்’ படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.