ச்சீய்… அரவிந்த்சாமியா இப்படி? : அப்செட்டான ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

arvitnhsamy

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி.

இனி நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தவரை அந்த சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் மீண்டும் நடிப்பில் பிஸியாக்க தொடங்கியது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து புதுப்படங்களில் கமிட்டாக ஆரம்பித்த அரவிந்த்சாமியை இயக்குநர் பாலா கூட தனது புதுப்படத்தில் கமிட் செய்திருக்கிறார். அதோடு மீண்டும் ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்திலும் இணைந்திருக்கிறார்.

Related Posts
1 of 5

எந்தப்படம் வந்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு மட்டுமே கால்ஷூட் கொடுக்கும் அரவிந்த்சாமி ஹிந்தியில் நடித்த ஒரு படத்தைப் பார்த்து அப்செட்டாகி இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஆமாம், ஹிந்தியில் டியர் டாட்(Dear Dad) என்ற படத்தில் ரசிகர்களை அப்செட்டாக்கியது அவர் நடித்திருந்த ஓரினச் சேர்க்கையாளர் கேரக்டர் தான். அதோடு விடவில்லை ஏன் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தீர்கள்? என்கிற சந்தேகத்தை அவரிடமே கேள்வியாக கேட்டிருக்கிறார்கள்.

”கதையை கேட்ட போது நிஜத்திலும் நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள், அவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. பிறகு ஏன் அவர்களை இந்த சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்? என்று தோன்றியது. அதனால்யே அந்த கேரக்டரில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன்” என்றாராம் அரவிந்த் சாமி.

‘தனி ஒருவன்’ செய்ற வேலையா இது?