பட்ஜெட் பஞ்சாயத்து! : ஜெயம் ரவி படத்திலிருந்து தயாரிப்பாளர் விலகல்
‘மிருதன்’ வாரி விட்டாலும் ஜெயம் ரவியின் வசூல் மார்க்கெட் ஒரு சதவீதம் கூட குறையவில்லை.
தற்போது பிரபுதேவா தயாரிப்பில் ‘போகன்’ படத்தில் நடித்து வரும் அவரை இயக்க டைரக்டர்கள் க்யூவ் கட்டி நிற்கிறார்கள்.
இருந்தாலும் ‘மிருதன்’ இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கே மீண்டும் ஒரு புதுப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயம்ரவி.
இந்தப் படத்தை முதலில் கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை மட்டுமே கெனன்யா பிலிம்ஸ் தயாரித்து வருவதால் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் சொன்ன பட்ஜெட்டைக் கேட்டு பதறி விட்டது கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம். இதனால் பஞ்சாயத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால் அந்தப்படத்திலிருந்து அந்த நிறுவனம் விலகி விட்டது.
தற்போது இந்தப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை நேமிசந்த் ஜபக் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
‘மிருதன்’ படத்தில் சோம்பிகளை காண்பித்தது போல் இந்த புதிய படத்தில் ஹீரோ ஜெயம்ரவி விண்வெளிக்கு செல்வது போல கதை அமைத்திருக்கிறாராம் சக்தி சௌந்தர்ராஜன்!
சோம்பிகளோட அட்டகாசமே தாங்க முடியல, இதுல இது வேறையா..?