அடடே அப்டியா..? : அஜித்- விஜய் வசூலை மிஞ்சிய சமந்தா!
உள்ளூரில் விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் செய்யும் வசூல் நிலவரம் தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்களின் படங்கள் சமீபகாலமாக வெளிநாடுகளில் வசூலில் சாதனை படைத்து வருவது ரசிகர்களிடையே பெருமிதமாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் எப்போதுமே முன்னணியில் இருக்கும். ஆனால் தற்போது இந்த இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் செய்த சாதனையை ஓரங்கட்டி வசூலில் சாதனை படைத்திருக்கிறதாம் சமந்தாவின் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான ‘அ ஆ’ தெலுங்கு படம்.
த்ரி விக்ரம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் நாயகனாக நிதின் நடித்திருந்தாலும் நாயகி சமந்தாவின் கதாபாத்திரத்துக்கே அதிக முக்கியம் என்பதால் முதலில் சமந்தாவை கமிட் செய்த பிறகு தான் ஹீரோவையே கமிட் செய்தார் த்ரி விக்ரம். ஒப்பந்தம் செய்த பிறகு சமந்தாவுக்கேற்ற ஹீரோவாக தேடிப் பிடித்தார் த்ரி விக்ரம்.
அவரது அந்த முக்கியத்துவதுக்கு நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் முதல் மூன்று தினங்களில் இந்தப்படம் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 11.2 கோடிகளை வசூலித்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இது விஜய்யின் தெறி படத்தின் யுஎஸ் வசூலைவிட மிக மிக அதிகம். அதேபோல கார்த்தியின் தோழா படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளையும் சேர்த்து யுஎஸ்ஸில் வசூல் செய்ததை விட இது அதிகமாம்.
முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் 11.2 கோடிகளை விஜய், அஜித் படங்கள் வசூலித்து சமந்தாவின் சாதனையை முறியடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.