காத்திருந்த ஆர்யா; கண்டுகொள்ளாத நயன்தாரா : அதெல்லாம் அந்த காலம்..!
மன கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதலாக ஒருவர் வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதை விட பெரிய ஆறுதல் எதுவுமே இருக்க முடியாது. சிம்பு, பிரபுதேவா இருவரும் கழட்டி விட்டபிறகு மனகஷ்டத்தில் இருந்தவருக்கு அந்த நேரத்தில் உற்ற ஆறுதலாக வந்தவர் தான் ஆர்யா.
அந்த அன்புக்காகவே தான் நடித்த பட விழாக்களில் கூட கலந்து கொள்ளாத நயன் தாரா ஆர்யாவின் சொந்தத் தயாரிப்பான அமர காவியம் படத்தின் ஆடியோ பங்ஷனில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அதோடு ஆர்யா என்னை மட்டுமல்ல, எல்லா நடிகைகளையும் நல்லா பார்த்துப்பார் அதனால் தான் அவரை எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கிறது என்று சர்ட்டிபிகேட்டும் கொடுத்தார்.
இப்படி தனக்கு பிடித்தமானவர் என்று விழா மேடையில் வெளிப்படையாக சொன்ன நயன்தாரா தான் இப்போது ஆர்யாவுடன் புதுப்படத்தில் ஜோடி சேர மறுத்து வருகிறாராம்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ஆர்யாவுக்கு ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நயன்தாரா நடித்த படங்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து ஹிட்டாவதால் அந்த செண்டிமெட்டை கவனித்தவர் ஜீவா தன்னை வைத்து தயாரிக்கப் போகும் புதுப்படத்தில் நயனை நடிக்கக் கூப்பிட்டார்.
நயனோ கைவசம் டஜன் கணக்கில் படமிருக்கிறது. என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கை விரித்து விட்டாராம். பரவாயில்லை காத்திருக்கிறேன் என்று சொல்லிப் பார்த்தும் இன்றுவரை நயனிடமிருந்து க்ரீன் சிக்னல் வராததால் வேறு நடிகைகளை தேடிப்போக ஆரம்பித்து விட்டார் ஆர்யா.
அப்போ அந்த ‘நல்ல’ நட்பு? அதெல்லாம் விக்னேஷ்சிவனுக்கு முந்தின காலம்ங்க…
