தர்பாரில் அரசியல் கிடையாது- முருகதாஸ் திட்டவட்டம்
ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் படம் “தர்பார்”. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன் கூட்டியே வெளியாகவிருக்கிறது. இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் முருகதாஸ்,
“தர்பார் படத்தில் அரசியல் இருக்காது. ரஜினிகாந்த் மும்பை போலீஷ் கமிஷ்னராக நடித்திருக்கிறார். அவர் இனிமையான மனிதர். அவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் ஆச்சரியப்படுத்தும். சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான கதை என்னிடம் தயாராக இருந்தது. அதை சூப்பர் ஸ்டாரிடம் கூறினேன். அவருக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் வேறு சில காரணங்களால் அப்படத்தை தொடர முடியவில்லை. இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்