ப்ளீஸ் என்னை விட்ருங்க… : போலீசிடம் தர்ம அடி வாங்கிய ‘நீயா நானா’ கோபிநாத்!

ஈ, எறும்பு கூட நுழைய முடியாத படிக்கு நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நிரம்பிய மக்கள் கூட்டம். இந்த மக்கள் வெள்ளத்தில் எத்தனை பிரபலங்கள் வந்தார்கள் சென்றார்கள் என்பதை சேனல்களில் பார்த்து தான் பலரும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் பிரபலங்கள் சிக்கி சின்னாபின்னாமானார்கள்.
இதில் அதிகம் நொந்து போனது நீயா நானா புகழ் கோபிநாத் தான்.
நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற கோபிநாத், அங்கு முண்டியடித்து நின்று கொண்டிருந்த கூட்டத்தில் கலந்திருந்தார்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அத்து மீறிய அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தியிருக்கிறார்கள்.
இதில் சில பிரம்படிகள் கோபிநாத் மீதும் விழுந்திருக்கிறது. நான் ‘நீயா நானா’ கோபிநாத் என்று சொல்லவும் வாய்ப்பு கிடைக்காமல், கூட்டத்திலிருந்து வெளியேறவும் வாய்ப்பு கிடைக்காததால் பிரம்படி தாங்காமல் வாசலிலேயே அழுதிருக்கிறார்.
பின்னர் கையெடுத்து கெஞ்சு கும்பிட்டு ஒரு வழியாக அங்கிருந்து சட்டை கிழியாமல் வெளியேறியிருக்கிறார்.
”ப்ளீஸ் இந்த புத்தகத்த படிக்காதீங்க” என்ற புத்தகத்தை எழுதி சாதனை படைத்த கோபிநாத்தை நேற்றய சூழல் ”ப்ளீஸ் என்னை விட்ருங்க” என்று சொல்ல வைத்து விட்டது.
அய்யோ பாவம்…!!