அவதார் 2- விமர்சனம்
முதல் பாகத்தில் இனத்திற்காக போராடிய ஜேக்சல்லி இந்தப் பாகத்தில் தன் குடும்பத்திற்காக போராடுகிறார். முதல் பாகம் காடென்றால் இந்தப்பாகம் கடல். ஒருவேளை அடுத்தப் பாகம் ஆகாயமாக இருக்கலாமோ?
ஜேம்ஸ் கேமரூனின் ஆகப்பெரும் பலங்களில் ஒன்று, எளிய மனிதர்களை பெரிய மனிதர்களோடு மோதவிட்டு, அதை கனகச்சிதமாக லாஜிக்கோடு கோர்ப்பது. டைட்டானிக்கில் ஏழை இளைஞனான ஜாக் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே சர்வைவல் செய்வான். முதல் அவதாரிலும் காட்டில் வாழும் ஏலியன்கள் பெரும் அறிவியல் துணைகொண்ட மனிதர்களோடு போராடுவார்கள். இந்த அவதார்-2லும் பெரும் ஆச்சர்யம் நிறைந்த வில்லனோடு மோதுகிறார்கள்.
படத்தின் தரம் தெய்வலெவல். கடலுக்குள் சென்று ஒரு புது உலகைத் தரிசித்த உணர்வை படத்தின் காட்சியமைப்புகள் கொடுக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்ததில் ஜேக் சல்லி, ஸ்பைடர் கேரக்டர், காலனல் மைல்ஸ், நெய்ட்ரி உள்பட எல்லோருமே அற்புத நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜேக்சல்லியின் மகனுக்கும் ஒரு கடல் மிருகத்திற்குமான தொடர்பு எமோஷ்னல் டச் ஆக இருந்தது
CG, சவுண்ட் எபெக்ட், ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ஏரியா எல்லாமே அத்தனை துல்லியம்.
மனிதன் vs ஏலியன் என அதகளமாக அமைந்த முதல் பாக அவதார் போல, குடும்பத்தலைவன் vs வில்லன் என அமைந்து விட்ட இந்த இரண்டாம் அவதார் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனாலும் இப்படியான அட்டகாச 3D விஷுவல் ட்ரீட்டுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்
3/5
#Avatar2