மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார் சத்யராஜ் ?

Get real time updates directly on you device, subscribe now.

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

Related Posts
1 of 7

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என கூறியுள்ளார் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி

#Angaaragan