‘கானாபாலா’ இல்லாம வட சென்னை படமா? : நோ… நெவர்…
‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து ‘மெட்ராஸ்’ வரை வட சென்னையை பிண்ணனியாகக் கொண்டு ரிலீசாகிற படங்கள் எல்லாமே வெற்றிப்படமாகி, வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதோ இன்னொரு வட சென்னைக் கதையாக தயாராகி வருகிறது ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா.’
வழக்கமான வட சென்னைக் கதைகள் என்றால் ஆக்ஷன், மசாலாவாகத்தான் இருக்கும். அந்த கலரை மாற்றி அங்கும் கூட அழகிய காதல் உண்டு என்பதைச் சொல்லப் போகிறாரம் அறிமுக இயக்குநர் நாகராஜன். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவராம்.
ரால்ப் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரபேல் சல்தானா தயாரிக்கும் இப்படத்தில் ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள்,
பொதுவா வட சென்னை என்றாலே வெட்டு, குத்து, ரெளடியிஸம்னு ஒரு பயங்கரமான முகம் இருக்குன்னு தான் எல்லாரும் நெனைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அங்க கூட அழகான காதலும் இருக்குங்கிறதை சொல்ல நெனைச்சேன். அதைத்தான் படமாக்கியிருக்கேன்.
ஹீரோ ரிஜனோட காதல், அந்தக் காதல்ல நடக்கிற சுவாரஷ்யமான சம்பவங்களை வைத்து தயாராகி வருகிறது.
சரி வட சென்னை கதைன்னா கண்டிப்பா கானாபாலா பாட்டு இருக்கணுமே..? ஆமாம், படத்துல ஒரு பாடலை கானாபாலா பாடியிருக்கிறார். ரஜின் மகாதேவ் இசையில் சினேகன், லலிதானந்த், பா.முகிலன். மதுரகவி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.